உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள்

இலவச தொழிற்பயிற்சி வகுப்புகள்

திருப்புத்தூர் : பிள்ளையார்பட்டி பஞ்சாப் நேஷனல் வங்கி உழவர் பயிற்சி மையத்தில் தொடர்ந்து பல்வேறு தொழில்கள் சார்ந்த இலவச பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. அதன்படி அக்., 10ல் பினாயில், சோப்பு ஆயில், பவுடர் தயாரித்தல், அக்., 14ல் மீன் வளர்ப்பு, அக்., 15 ல் கால்நடை தீவனம் தயாரிப்பு, அக்., 16 ல் ஆடு வளர்ப்பு, அக்., 17 ல் மூலிகை குளியல் ஷாம்பு தயாரிப்பு, அக்., 23 ல் பால் மதிப்பு கூட்டல், அக்., 24ல் தேனீ வளர்ப்பு, அக்., 28 ல் பால் காளான், சிப்பி காளான் வளர்ப்பு, அக்., 29ல் சூரிய உலர்த்தி அமைத்தல் ஆகிய பயிற்சிகள் அளிக்கப்படும். இரண்டு நாள் பயிற்சியாக அக்., 27 ல் பழங்கள் ஜாம், கூழ், ஸ்குவாஷ் தயாரிப்பு, ஏழு நாள் பயிற்சியாக அக்., 13 ல் பட்டை வயர் கூடை பின்னுதல் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. பயிற்சி பெற 94885 75716 ல் பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ