உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளையார்பட்டியில் இலவச தொழிற்பயிற்சி

பிள்ளையார்பட்டியில் இலவச தொழிற்பயிற்சி

திருப்புத்துார் : பிள்ளையார்பட்டி பி.என்.பி.உழவர் பயிற்சி மையத்தில் தொழில் முனைவோர்க்கு இலவச பயிற்சி அளிக்கப்படு கிறது. ஒரு நாள் பயிற்சியாக செப்.8ல் ஆடு வளர்ப்பு பயிற்சி, செப்.9ல் பட்டுப்பூச்சி வளர்ப்பு, செப்.12ல் டிஜிட்டல் மார்க்கெட்டிங், செப்.18ல் நுண்கீரை வளர்ப்பு, செப்.19ல் உடனடி ரெடி மிக்ஸ் உணவு தயாரித்தல், செப்.20ல் நாட்டுக்கோழி வளர்ப்பு, செப்.25ல் பினாயில், சோப்பு ஆயில், பவுடர் தயாரித்தல், செப்.26ல் நெல்லிக்காய் மதிப்பு கூட்டல் பயிற்சி அளிக்கப் படுகிறது. இரு நாள் பயிற்சியாக செப்.10ல் சிறுதானிய தின்பண்டம் தயாரித்தல், செப்.22ல் சிறுதானிய குக்கீஸ் பிரவுனி தயாரித்தல் பயிற்சி நடைபெறும். மூன்று நாள் பயிற்சியாக செப்.15ல் மூலிகை குளியல் சோப், நீர்ம சோப் தயாரித்தல் பயிற்சி, ஒரு வார பயிற்சியாக ஆரி ஒர்க் பயிற்சி செப். 15 முதல் செப்.20 வரை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் 94885 75716ல் பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி