இலவச தொழில் பயிற்சி
திருப்புத்துார்: பிள்ளையார்பட்டியில் பி.என்.பி. உழவர் பயிற்சி மையத்தில் இலவச தொழில் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இங்கு ஒரு நாள் பயிற்சியாக ஏப்.16ல் உணவு பொருட்கள் உரிமம் பெறுதல்,லேபிளிங்,பேக்கேஜிங் சிறப்பு பயிற்சி, ஏப்.17 ல் மாட்டு சாணம் மதிப்பு கூட்டல் பொருட்கள் தயாரிப்பு, ஏப்.19ல் நாட்டுக்கோழி வளர்ப்பு, நோய் மேலாண்மை, ஏப்.29 ல் இயற்கை விவசாயம், இடுபொருள்கள் தயாரித்தல், ஏப்.30ல் பால் மதிப்பு கூட்டல், கால்நடை தீவனம் தயாரித்தல் ஆகிய பயிற்சி முகாம் நடைபெறும்.இரண்டு நாட்கள் பயிற்சியாக ஏப்.22 ல் சிறுதானிய தின்பண்டங்கள் தயாரித்தல், சந்தை படுத்துதல், ஏப்.24ல் வணிக ரீதியாக மசாலா பொடி தயாரித்தல், சந்தைப்படுத்துதல் ஆகிய செய்முறை பயிற்சி அளிக்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 94885 75716 அல்லது 95784 99665 ல் பதிவு செய்யலாம்.