மேலும் செய்திகள்
மதுரையில் சுதந்திர தின கொண்டாட்டம்
17-Aug-2025
தேவகோட்டை: திருவேகம்புத்துாரில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று தியாகம் செய்தவர்களை போற்றும் வகையில் தியாகிகள் நினைவாலயம் கட்டப்பட்டது. இதன் அருகில் தியாகி பாலபாரதி செல்லத்துரை நினைவிடமும் இருக்கிறது. பராமரிப்பின்றி மோசமான நிலையில் இருந்தது. பாலபாரதி உறவினர் த.வெ.க. மாவட்ட செயலாளர் டாக்டர் பிரபு இந்த நினைவாலயத்தை புனரமைப்பு செய்து புதுப்பித்தார். இதன் திறப்பு விழா மத்திய உள்துறை அமைச்சக அலுவலர் அற்புதம் தலைமையில் நடந்தது. முன்னாள் கப்பற்படை அதிகாரி துரை கருணாநிதி வரவேற்றார். தியாகி களின் வாரிசுகளை கவுரவித்தும், திருவேகம் புத்துார் அரசு மேல் நிலைப் பள்ளியில் பொது தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி த.வெ.க. மாவட்ட செயலாளர் பிரபு பேசினார்.
17-Aug-2025