உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

திருப்புத்துார்: திருப்புத்துார் சிவகங்கை ரோடு செல்வவிநாயகர் கோயிலில் கும்பாபிேஷகம் நடந்தது.இக்கோயிலில் விநாயகர், புற்று அம்மன் சன்னதிகள் உள்ளன. இங்கு அபூர்வமான திருவோட்டு மரம் வளர்ந்துள்ளது. இக்கோயிலுக்கு திருப்பணி நடந்து நேற்று முன்தினம் காலை யாகசாலை பூஜைகள் துவங்கின. மாலையில் முதலாம் காலயாக பூஜைகள் நடந்து பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜைகள் துவங்கின. பூஜை நிறைவடைந்து பூர்ணாஹூதிக்கு பின் கலசங்கள் புறப்பாடாகி காலை 11:00 மணிக்கு விமான கலசத்தில் புனித நீரால் கும்பாபிேஷகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை