உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வைகையில் குவியுது குப்பை: தடுப்பது யார்

வைகையில் குவியுது குப்பை: தடுப்பது யார்

மானாமதுரை: வைகை ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க உள்ளாட்சி அமைப்பு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் குப்பை கொட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் தேவையையும்,விவசாய தேவையையும் வைகை பூர்த்தி செய்து வருகிறது. இந்நிலையில் வைகை ஆற்றில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சில தனியார் ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்கழிவுநீரை நேரடியாக வைகை ஆற்றில் விடுவதால் ஆற்றின் தன்மை பாதிக்கப்பட்டு வருவதோடு குடிநீரின் தரமும் மாறி விடுகிறது.இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட் கிளை தெரிவித்தது.இதனையடுத்து மேற்கண்ட5 மாவட்ட கலெக்டர்களும் வைகை ஆற்றுக்குள் கழிவு நீர் விடுவதை தடுக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் விடப்படுவதை தடுக்க 11 இடங்களில் ரூ.1.10 கோடி செலவில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று வைகை ஆற்றுப்பகுதிக்குள் குப்பை கொட்டுவதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மானாமதுரை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டு பகுதிகளிலும் தினந்தோறும் சேகரமாகும் குப்பைகளை தாயமங்கலம் ரோட்டில் உள்ள குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று மக்கும் குப்பை மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து இயற்கை உரம் தயார் செய்து வருகின்றனர்.ஆனால் சிலர் நகர் பகுதிக்குள் ஓடும் வைகை ஆற்றுக்குள் குப்பையை கொட்டுவதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமில்லாமல் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.இப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தி குப்பை கொட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு சமூக ஆர்வலர்களிடம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை