பள்ளி,- கல்லுாரி வாகனங்கள் மோதியதில் சிறுமிகள் காயம்
காரைக்குடி: காரைக்குடியில் பள்ளி மற்றும் கல்லுாரி வாகனங்கள் மோதிய விபத்தில் சிறுமிகள் காயமடைந்தனர்.காரைக்குடி கழனிவாசல் அருகே நேற்று காலை கோட்டையூரைச் சேர்ந்த தனியார் பள்ளி பஸ்சும், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இன்ஜி., கல்லுாரி பஸ் வந்த போது விபத்தில் சிக்கியது. இதில் பள்ளி வேனில் அமர்ந்திருந்த இரு சிறுமிகள் படுகாயம் அடைந்தனர் போலீசார் போக்குவரத்தை சரி செய்ததோடு, காயமடைந்த சிறுமிகளை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.