உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பக்ரீத் கொண்டாட்டம் ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற ஆடு

பக்ரீத் கொண்டாட்டம் ரூ.40 ஆயிரத்திற்கு விற்ற ஆடு

திருப்புவனம்: திருப்புவனத்தில் நேற்று நடந்த வாரச்சந்தையில் 40 கிலோ எடை கொண்ட ஆடு 40 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம் கால்நடை சந்தை பிரசித்தி பெற்றது. வாரந்தோறும் செவ்வாய்கிழமை காலை ஐந்து மணி முதல் ஒன்பது மணி வரை நடக்கும் கால்நடை சந்தையில் பெத்தானேந்தல், கீழடி, கொந்தகை, பழையனுார், அல்லி நகரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஆடு, கோழி உள்ளிட்டவைகளை கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.திருப்புவனம் சந்தையில் ஆடு, கோழி வாங்குவதற்காக மதுரை, தேனி, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகை தருவது வழக்கம், வரும் ஏழாம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் தொடர்ச்சியாக முகூர்த்த நாட்களும் வர உள்ளதால் நேற்றைய சந்தையில் ஆடு, கோழிகளின் விலை உயர்ந்து காணப்பட்டது.40 கிலோ எடை கொண்ட கிடா 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. 10கிலோ எடை கொண்ட ஆடு ஏழாயிரம் ரூபாயில் இருந்து பத்தாயிரம் ரூபாயாக விற்பனையானது. நாட்டு கோழி கிலோ 350 ரூபாயில் இருந்து 450 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை