உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பூட்டிய வீட்டில் திருட்டு தங்க, வெள்ளி நகை மீட்பு

பூட்டிய வீட்டில் திருட்டு தங்க, வெள்ளி நகை மீட்பு

திருப்புத்துார் : திருப்புத்துாரில் பூட்டிய வீட்டில் திருடியவரை போலீசார் கைது செய்து தங்க,வெள்ளி நகைகளை மீட்டனர்.திருப்புத்துார் நாகராஜன் நகரைச் சேர்ந்த அழகுகுமார் என்பவரின் வீட்டில்ஜனவரியில் வீட்டில்இருந்தவர்கள் வெளியே சென்றிருந்த போது நுழைந்த திருடர் பீரோவிலிருந்த தங்க நகைகள், வெள்ளி பொருட்கள் திருடி சென்றார். எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் விசாரித்தனர்.நேற்று காலை திருப்புத்தூர் அருகே காரைக்குடி ரோட்டில் போலீசாரின் வாகனத் தணிக்கையின் போது தேனி, தேவாரம்கிருஷ்ணம்பட்டி, கிழக்கு தெருவைச் சேர்ந்த ரமேஷ் மகன் சாரதி19 என்பவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கையில் அழகுகுமாரின் வீட்டில் திருடியவர் என்பது உறுதியானது. அவரிடமிருந்து 55 கிராம் தங்க நகை, மோதிரம், தோடு, நான்கரை கிராம் வெள்ளி ஆகியவற்றை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ