உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் அரசு தனியார் பஸ் டிரைவர்கள் வாக்குவாதம்

காரைக்குடி பஸ் ஸ்டாண்டில் அரசு தனியார் பஸ் டிரைவர்கள் வாக்குவாதம்

காரைக்குடி : காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் முந்தி செல்ல முயன்றபோது அரசு மற்றும் தனியார் பஸ்கள் மோதிக்கொண்டதில், டிரைவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியது. இதனால் பயணிகள் அலைக்கழிப்பிற்கு உள்ளாகினர். காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் நேற்று தொண்டி நோக்கி புறப்பட்ட அரசு பஸ்சும், அறந்தாங்கிக்கு புறப்பட்ட தனியார் பஸ்சும் மோதிக்கொண்டது. இதனால் இரு பஸ் டிரைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் அலைக்கழிக்கப்பட்டனர். இதுபோன்று காரைக்குடி புது பஸ் ஸ்டாண்டில் போலீசார் முறையாக ரோந்து பணியில் ஈடுபடாததால், அரசு, தனியார் பஸ் டிரைவர்கள் இடையே பஸ்களை உரிய நேரத்திற்குள் எடுப்பதில் வாக்குவாதம், தகராறு ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதன் காரணமாக பஸ்சில் வெளியூர் செல்ல வரும் பயணிகள் தான் அலைக்கழிக்கப்படுகின்றனர். காரைக்குடி போலீசார் பஸ் ஸ்டாண்டில் அடிக்கடி தகராறில் ஈடுபடும் அரசு, தனியார் பஸ் டிரைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, பயணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ