உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் அரசு கலைக்கல்லுாரி திறப்பு

மானாமதுரையில் அரசு கலைக்கல்லுாரி திறப்பு

மானாமதுரை: மானாமதுரையில் செய்களத்துார் பகுதியில் புதிய அரசு கலை கல்லுாரி திறப்பு விழா நடந்தது.தமிழகத்தில் நேற்று மானாமதுரை உள்ளிட்ட 11 ஊர்களில் புதிய அரசு கலை கல்லுாரிகளை முதல்வர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.இதனைத் தொடர்ந்து மானாமதுரை செய்களத்துார் காமாட்சி அம்மன் பாலிடெக்னிக் வளாகத்தில் தற்காலிகமாக செயல்படும் புதிய அரசு கலைக் கல்லுாரி வளாகத்தில் நடைபெற்ற விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.எம்.எல்.ஏ.,க்கள் தமிழரசி,மாங்குடி முன்னிலை வகித்தனர்.முன்னதாக கல்லுாரி முதல்வர் கோவிந்தன் வரவேற்றார். கோட்டாட்சியர் விஜயகுமார், முன்னாள் எம்.எல்.ஏ., மதியரசன், நகராட்சி தலைவர் மாரியப்பன் கென்னடி, துணைத்தலைவர் பாலசுந்தரம், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், மானாமதுரை தாசில்தார் கிருஷ்ணகுமார், பி.டி.ஓ., ரமேஷ்கண்ணன் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை