உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பழுதாகி நின்ற அரசு பஸ்: தவிக்கும் பயணிகள்

பழுதாகி நின்ற அரசு பஸ்: தவிக்கும் பயணிகள்

திருப்புவனம்: மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் பலவும் பராமரிப்பு இன்றி அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நிற்பதால் பயணிகள் பரிதவிக்கின்றனர். மதுரை - ராமேஸ்வரம் வழித்தடத்தில் காரைக்குடி, மதுரை, சேலம், கோவை, ஈரோடு ஆகிய மண்டலங்களைச் சேர்ந்த பஸ்கள் இயக்கப்படுகின்றன.ராமேஸ்வரத்திற்கு தினசரி ஏராளமான பயணிகள் வந்து செல்கின்றனர். வட மாநில பக்தர்கள் மதுரையில் இறங்கி அரசு பஸ்களை நம்பியே பயணம் செய்கின்றனர். மதுரையில் இருந்து திருப்புவனம் வழியாக காரைக்குடி கோட்டத்தைச் சேர்ந்த 93 பஸ்களும், மதுரை கோட்டத்தைச் சேர்ந்த 50 பஸ்களும், கோவை, ஈரோடு, சேலம் மண்டலங்களைச் சேர்ந்த தலா ஒரு பஸ்களும் இயக்கப்படுகின்றன. தற்போது மஞ்சள், நீல நிற பஸ்களும் புதிதாக இயக்கப்பட்டு வருகின்றன. புத்தம் புதிய பஸ்களும் உரிய பராமரிப்பு இன்றி அடிக்கடி பழுதாகி பாதி வழியில் நின்று விடுகின்றன. நேற்று ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற மதுரை சிப்காட் கிளையைச் சேர்ந்த டி.என். 58, என் 2268 என்ற அரசு பஸ் செல்ப் எடுக்காததால் 4 வழிச்சாலையில் பாப்பான்குளம் விலக்கில் பழுதாகி நின்றது. பயணிகளை அடுத்தடுத்து வந்த பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை