உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கொளுத்தும் வெயிலில் பஞ்சராகும் அரசு பஸ்: தவிக்கும் பயணிகள்

கொளுத்தும் வெயிலில் பஞ்சராகும் அரசு பஸ்: தவிக்கும் பயணிகள்

திருப்புவனம் : திருப்புவனம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களில் பழுதான டயர்களையே பயன்படுத்துவதால் கொளுத்தும் வெயிலுக்கு டயர் பஞ்சராகி நின்று பயணிகள் பரிதவிப்பிற்குள்ளாகின்றனர். அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்டத்தின் கிளை பணிமனை மூலம் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு 44 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினசரி இரண்டு முதல் ஆறு முறை கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன. கிளை பணிமனையில் 44 பஸ்கள் இருந்தாலும் அதில் 32 பஸ்கள்தான் ஓரளவிற்கு இயங்கும் நிலையில் உள்ளது. இதில் 20 பஸ்கள் காலாவதியாகி விட்டன. இதற்கு மாற்றாக தொலை தூரங்களுக்கு இயக்கப்பட்டு பழுதான சொகுசு பஸ்கள் உள்ளிட்ட ஐந்து பஸ்கள் டவுன் பஸ்களாக மாற்றி இயக்கப்பட்டு வருகின்றன. அந்த பஸ்களும் ஸ்டார்ட் ஆகாமல் அடிக்கடி பழுதாகி நிற்பதால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர். நேற்று காலை திருப்புவனம் வழியாக பழையனூர் சென்ற டவுன் பஸ் பஞ்சராகி நின்று விட்டது. வெயில் காரணமாக வெப்பத்தை தாங்க முடியாமல் டயர் பஞ்சரானதுடன் டயர்கள் மேலும் சேதமடையாமல் இருக்க முண்டுக்கல் வைத்து டயரை தூக்கி நிறுத்தியிருந்தனர். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் பலரும் வேறு வழியின்றி ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை