உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

அரசு பஸ் கண்ணாடி உடைப்பு

திருப்புவனம் : திருப்புவனம் அருகே கழுகேர்கடை வந்த அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து விட்டு தப்பிய உதயகுமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். மதுரை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து கழுகேர்கடை கிராமத்திற்கு தினசரி நான்கு முறை அரசு டவுன் பஸ் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஏழு மணிக்கு கழுகேர்கடையில் நிறுத்தி பயணிகள் இறங்கி கொண்டிருக்கும் போது அதே ஊரைச் சேர்ந்த உதயகுமார் 28, என்பவர் பஸ்சின் முன்புற கண்ணாடியை இரும்பு கம்பியால் தாக்கி உடைத்து விட்டு தப்பி விட்டார். பஸ் டிரைவர் இளையராஜா புகார்படி திருப்புவனம் போலீசார் வழக்கு பதிந்து உதயகுமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை