உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம் 

அரசு ஊழியர் ஆர்ப்பாட்டம் 

சிவகங்கை : தேர்தல் வாக்குறுதிபடி பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்து, கருணை அடிப்படை பணிநியமன தடையை நீக்க வேண்டும் உட்பட கோரிக்கையை முன்வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மகளிர் அமைப்பாளர் லதா தலைமை வகித்தார்.துணை தலைவர் வினோத்ராஜா, இணை செயலாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கோரிக்கையை விளக்கி பேசினார். மாவட்ட பொருளாளர் மாரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ