அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை: சத்துணவு, அங்கன்வாடி ஊழியர், துாய்மை பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்காத அரசை கண்டித்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.மாவட்ட தலைவர் எம்.செல்வக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கே.ஜெயப்பிரகாஷ் கோரிக்கையை விளக்கி பேசினார். தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மிக்கேலம்மாள், மாநில செயலாளர் நுார்ஜஹான், சத்துணவு ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் சங்கரநாராயணன், மக்கள் நல பணியாளர் சங்க மாநில செயலாளர் சுரேஷ்குமார், கொசுபுழு ஒழிப்பு மஸ்துார் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன், மேல்நிலை தொட்டி இயக்குபவர் சங்க மாநில துணை தலைவர் துரைப்பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணை தலைவர் முத்துக்குமார் நன்றி கூறினார்.