மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர்களும் போராட முடிவு
11-Dec-2024
சிவகங்கை:பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைக்களை நிறைவேற்றாவிட்டால் 2025 மார்ச்-க்கு பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சரண்டர் விடுப்பை மீண்டும் வழங்க வேண்டும். பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் திரும்ப வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் பல கட்ட போராட்டங்கள் நடத்தவுள்ளனர்.டிச., 27 மாநிலம் முழுதும் அனைத்து அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம், 2025 பிப்., 20 மாவட்ட தலைநகரங்களில் 24 மணி நேர தர்ணா, 2025 பிப்., 25 ல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு, 2025 மார்ச் 19 ல் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்வது எனவும் முடிவு செய்துள்ளனர். அதற்கு பிறகும் கோரிக்கைகளை மாநில அரசு நிறைவேற்றாவிடில் 2025 மார்ச்-க்கு பின் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
11-Dec-2024