மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் சங்க செயற்குழு
05-Jul-2025
சிவகங்கை; சிவகங்கையில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் கடந்த கால நடவடிக்கை குறித்து பேசினார். அரசுத் துறையில் பணிபுரியும் துறைவாரியான சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு மாவட்ட அளவிலான குறைதீர் கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கக் கட்டடத்தில் ஒவ்வொரு மாதமும் நடத்த வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டது. மாவட்ட தலைவர் பொறுப்பு மாரி, மாவட்ட பொருளாளர் பொறுப்பு கலைச்செல்வி, மாநில செயற்குழு உறுப்பினர் கோபால், மாவட்ட தணிக்கையாளர் நவநீதக்கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டனர்.
05-Jul-2025