மேலும் செய்திகள்
உங்கள் ஊராட்சி செய்தி
14-Jan-2025
விதிகளை மீறி அரசு கட்டடம்!
02-Jan-2025
சிவகங்கை : சிவகங்கையில் அரசு பொறியியல் கல்லுாரி அமைத்து தரவேண்டும் உள்ளிட்ட 16 கோரிக்கை அடங்கிய மனுவை முதல்வரிடம் நகராட்சி தலைவர் துரைஆனந்த் வழங்கினார்.மனுவில் கூறியிருப்பதாவது: சிவகங்கை நகராட்சியில் கழிவு நீர் கால்வாய் முற்றிலும் சேதமடைந்து மழைநீர் வடிகால் செல்ல வழி இல்லாமல் சாலையில் செல்கிறது. மழை காலங்களில் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதோடு. நோய் தொற்று ஏற்படும் நிலை நிலவி வருகிறது. எனவே புதிதாக 100 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவு நீர் கால்வாய் அமைத்து தர வேண்டும்.நகராட்சியில் 2007ஆம் ஆண்டு பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்கள் 50 கிலோ மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அபிவிருத்தி பகுதிகளில் கூடுதலாக 30 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள சாக்கடை கழிவு நீர் குழாய் அமைத்து தர வேண்டும். சிவகங்கை நகர் தெப்பகுளத்தை சீரமைக்க வேண்டும்.நகராட்சிக்கு குப்பை கொட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நகரில் செவிலியர் பயிற்சி கல்லுாரி, அரசு பொறியியல் கல்லுாரி, அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம், அரசு மருத்துவக் கல்லுாரியில் செவிலியர் உதவியாளர் பயிற்சி, ஆய்வக நுட்பனர் பயிற்சி, நுண்கதிர் தொழில் நுட்ப பணியாளர் வகுப்புகள், மருந்தாளுநர் பட்டயப் படிப்பு உள்ளிட்டவை தொடங்க வேண்டும்.நகரில் உள்ள 27 வார்டு மக்களுக்கும் குடிநீர் விநியோகம் தினந்தோறும் சீரான முறையில் வழங்க நகராட்சிக்கு சொந்தமான செட்டி ஊரணியில் ராட்சச ஆழ்துளை கிணறு அமைத்து அதில் 11 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டும். புதிய நகராட்சி அலுவலக கட்டடம், புதிய பத்திர பதிவு அலுவலக கட்டடம், வடுவன்குளம் ஊரணியை துார் வாரி சீரமைத்து நடைபாதை அமைக்க வேண்டும். சிவகங்கையில் இருந்து இரவு நேர பஸ்களை இயக்க ஆவணம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 16 வகையான கோரிக்கை குறிப்பிடப்பட்டிருந்தது.
14-Jan-2025
02-Jan-2025