திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி அரசு பள்ளி மாணவி முதலிடம்
திருப்புவனம் : திருப்புவனம் நுாலகத்தில் நடந்த திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்தார். இங்கு நடந்த போட்டிக்கு அழகப்பா பல்கலை பேராசிரியர் பாண்டி, எழுத்தாளர் ஞானபண்டிதன் முன்னிலை வகித்தனர். இப்போட்டியில் 9 முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் திருப்புவனம் அரசு பள்ளி மாணவி ருத்ரா முதலிடமும், இரண்டாம் இடத்தை சாருபா, மூன்றாம் இடத்தை பிரியதர்ஷினி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுகு பரிசு சான்றுகள் வழங்கப்பட்டன. நுாலகர்கள் சரவணன், லதா, ஆசிரியர் வாசுதேவன் பங்கேற்றனர். வாசகர் வட்ட தலைவர் கோபால் ஏற்பாட்டை செய்திருந்தார்.