உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வருகை

சிங்கம்புணரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று வருகை

சிங்கம்புணரி: கோபூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக கவர்னர் இன்று (மே 22) சிங்கம்புணரி வருகிறார்.சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கோசாலை டிரஸ்ட் 10ம் ஆண்டு துவக்க விழா இன்று நடக்கிறது. சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் தலைமை வகிக்கிறார். குன்றக்குடி பொன்னம்பல அடிகள் ஆசி வழங்குகிறார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். காலை 8:30 மணிக்கு சிங்கம்புணரி வரும் கவர்னர், சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் முன்பாக உள்ள கோசாலையை பார்வையிடுகிறார். தொடர்ந்து கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு விழா மண்டபத்துக்கு செல்கிறார். அங்கு நடைபெறும் 108 கோபூஜை, யாக பூஜையில் பங்கேற்கிறார். ஜல்லிக்கட்டு காளைகள், ரேக்ளா மாட்டுவண்டிகளின் அலங்கார அணிவகுப்பு, கண்காட்சிகளை பார்வையிடுகிறார். மேடையில் பாரம்பரிய தொழில்முனைவோர், பல்வேறு துறையினரை பாராட்டி பேசுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சேவுகமூர்த்தி கோசாலை டிரஸ்ட் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ