மேலும் செய்திகள்
சத்துணவு ஊழியர் பதவிக்கு வரும் 16ல் நேர்காணல்
10-Jun-2025
திருப்புவனம்; திருப்புவனம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் சமையலர் உதவியாளர் பணியிடத்திற்கு பட்டதாரி பெண்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.திருப்புவனம் ஒன்றியத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சத்துணவு மையங்களில் சமையலர், உதவியாளர் என இருவர் இருப்பது வழக்கம், இந்த இரு பணியிடங்களுக்கும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்தில் 98 சத்துணவு மையங்கள் உள்ளன. இதில் 30 மையங்களில் காலி பணியிடத்திற்கு 111பேர் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்டிருந்ததில் 101 பேர் வந்திருந்தனர். இதில் பெரும்பாலான பெண்கள் கல்லூரி படிப்பு முடித்து பட்டம் பெற்றவர்கள், பி.ஏ., பி.காம்., எம்.ஏ., முடித்த பலரும் சமையலர் உதவியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர்.பட்டதாரி பெண்கள் கூறுகையில்: குடும்ப சூழல், பல வருடங்களாக விண்ணப்பித்தும் வேலை கிடைக்கவில்லை. சமையலர் உதவியாளர் பணி என்றாலும் அரசு பணி, ஆகவே நேர்முகத் தேர்வுக்கு வந்துள்ளோம். இந்த பணி கிடைத்தால் மிகவும் உதவியாக இருக்கும், என்றனர்.
10-Jun-2025