உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜன. 26ல் கிராம சபை கூட்டம் 

ஜன. 26ல் கிராம சபை கூட்டம் 

சிவகங்கை: குடியரசு தினத்தை முன்னிட்டு ஜன., 26 அன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் நடத்த வேண்டும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் உள்ள 12 ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் 445 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் செயல் படுத்தப்படும் திட்டங்கள், மக்களுக்கு தேவையான திட்டங்களை தேர்வு செய்வதற்கு மக்களிடம் கருத்து கேட்கும் விதத்தில் கிராம சபை கூட்டம் நடத்தப்படுகிறது. வார்டு வாரியாக சுழற்சி முறையில் ஜன.,26ல் கிராம சபை கூட்டம் காலை 11:00 மணிக்கு நடத்த வேண்டும்.கிராம வளர்ச்சி திட்டம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சலை ஒழித்தல் போன்றவை குறித்து விவாதிக்க வேண்டும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ