பசுமையாக்கும் திட்டம்: 63,000 மரக்கன்று தயார்
திருப்புத்தூர்: பசுமையாக்கும் திட்டம் மூலம் மரக்கன்றுகளை வளர்க்க வனத்துறை மூலம் 63 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு, ஊராட்சிகள் தோறும் வழங்கி வருகின்றனர். தமிழகத்தின் வனப்பரப்பு 17 சதவீதமாக உள்ளது. இதை 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு பசுமையாக்கும் திட்டம் மூலம் 10 கோடி மரக்கன்றுகள் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வனத்துறை நர்சரிகளில் 63,000 மரக்கன்றுகள் வளர்த்து, ஊராட்சிகள் தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இது குறித்து வனச்சரக அலுவலர் கார்த்திகேயன் கூறியதாவது, வனத்துறை மூலம் மகாகனி, புங்கன், நாவல், புளி, நீர்மருது உள்ளிட்ட வகை மரக்கன்றுகள் 6 அடி உயரம் வரை வளர்க்கப்படுகிறது. நல்ல வேர்ப்பிடிப்பு வந்ததும், ஊராட்சி பகுதியில் நட்டு நன்கு வளர்க்கப்படும் என்றார்.