மேலும் செய்திகள்
சிவகங்கையில் 8 பேருக்கு குண்டாஸ்
30-Apr-2025
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 9 பேரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேஷனில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இடையமேலுார் அருகே புதுப்பட்டியை சேர்ந்த முத்துக்குமார் மகன் வெற்றிவேல் 21, தாலுகா ஸ்டேஷனில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கோவனுார் பிச்சைமுத்து மகன் சிவபாலகிருஷ்ணன்என்ற மனேஜ்குமார் 21, திருப்பாச்சேத்தி போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்கில் தொடர்புடைய மாத்துார் அசல்ராஜா மகன் நித்திஷ்குமார் 19, திருப்புத்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் போக்சோ வழக்கில் தொடர்புடைய சிங்கம்புணரி அருகே கரியம்பட்டி வெள்ளையன் மகன் உருமன் 57, காரைக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் போக்சோ வழக்கில் தொடர்புடைய காரைக்குடி அருகே பெரியக்கோட்டை ஆவத்தான் குடியிருப்பு சின்னக்கருப்பன் மகன் செல்லையா 40, சிங்கம்புணரி போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்கில் தொடர்புடைய கக்கன்ஜி நகர் காளிதாஸ் மகன் சோலைமலை 24, மானாமதுரை போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்கில் தொடர்புடைய தே.புதுக்கோட்டை பாண்டிசாமி மகன் சிலம்பரசன் 19, இளையான்குடி போலீஸ் ஸ்டேஷனில் குற்ற வழக்கில் தொடர்புஉடைய வேலடிமடை ஆனந்தகுமார் 24, வைரம்பட்டி சங்கரபாண்டி மகன் பன்னகருப்பு 25 ஆகிய 9 பேரை குண்டர் தடுப்பு காவலில் அடைக்க எஸ்.பி., ஆஷிஷ் ராவத் பரிந்துரையின் பேரில் கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.
30-Apr-2025