உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தலைமை ஆசிரியர்கள் பணி ஓய்வு; பணப்பலன் பெறுவதில் இழுபறி

தலைமை ஆசிரியர்கள் பணி ஓய்வு; பணப்பலன் பெறுவதில் இழுபறி

சிவகங்கை : மாநில தணிக்கை குழு தாமதத்தால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணி ஓய்வு பலன் பெறுவதில் இழுபறி நீடிக்கிறது.தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பலர் ஆண்டுதோறும் பணி ஓய்வு பெறுகின்றனர். இவர்களுக்கான பணிக்கொடை, ஈட்டிய விடுப்பு உள்ளிட்டவற்றை நிதித்துறை செயலரின் கீழ் உள்ள மாநில தணிக்கை குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும்.தணிக்கை துறையில் பணிபுரியும் முதுநிலை கண்காணிப்பாளர் நிலையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தணிக்கையாளர்கள் சென்று, தலைமை ஆசிரியர்களின் வரவு செலவு கணக்கு விபரங்களை தணிக்கை செய்து, தடையின்மை சான்று வழங்கிய பின்னரே, அவர்களின் பணி ஓய்விற்கான பணப்பலன் கிடைக்கும். தமிழக அளவில் 65 முதுநிலை கண்காணிப்பாளர்கள் வரை இருந்தனர். கால போக்கில் அவர்கள் பணி ஓய்வு பெற்று சென்றதால் 20 க்கும் குறைவான தணிக்கையாளர்களே பணிபுரிகின்றனர். இதன் காரணமாக மாவட்ட வாரியாக சென்று, தணிக்கை செய்வதில் தாமதம் ஏற்படுவதால் தலைமை ஆசிரியர்கள் ஓய்வுக்கு பிறகும் பணப்பலன்களை பெற முடியாமல் தவிக்கின்றனர்.

பணி ஓய்வு பணப்பலன் இழுபறி

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாநில நிர்வாகிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும்அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மார்ச், ஏப்ரலில் பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர் பட்டியலை கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்ப வேண்டும். மார்ச், ஏப்ரல் மாதங்களில் தணிக்கை செய்தால் மட்டுமே மே மாதத்தில் பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைக்கும். அதிலும் மே மாதத்தில் பணி ஓய்வு பெறும் நாளாக இருந்தால் அந்த தலைமை ஆசிரியர்களுக்கு பணப்பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். இதன் மூலம் ஒவ்வொரு தலைமை ஆசிரியருக்கும் தலா ரூ.10 முதல் 20 லட்சம்வரை பெற வேண்டிய பணப்பலன் தாமதம் ஏற்படுகிறது என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ