உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கானாடுகாத்தான் ரோட்டில் சிக்கும் கனரக வாகனங்கள்

கானாடுகாத்தான் ரோட்டில் சிக்கும் கனரக வாகனங்கள்

காரைக்குடி : கானாடுகாத்தான் அருகே குறுகிய சாலையில் கனரக வாகனங்கள் சிக்கிக் கொள்வதால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.முக்கிய சுற்றுலா இடமாக கானாடுகாத்தான் உள்ளது. தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். மேலும், பள்ளத்துார் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு நெல் மூடைகள் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களும் இந்த ரோடு வழியாக செல்கின்றன. இங்குள்ள பழையூர் பெரிய கோயில் சாலை மிகவும் குறுகிய சாலையாக உள்ளது. குறுகிய சாலையால் தினமும் வாகனங்கள் சகதியில் சிக்கிக்கொள்கிறது.முன்னாள் பேரூராட்சி தலைவர் சிதம்பரம் கூறுகையில்: கானாடுகாத்தான் பேரூராட்சியில் உள்ள பழையூர் - பெரிய கோயில் சாலை மாநில நெடுஞ்சாலையாகும். கொத்தமங்கலம் வழியாக புதுக்கோட்டை மாவட்டம் வரை செல்லும் சாலையாக, இச்சாலை உள்ளது. இருபுறமும் வயல்கள் உள்ளதால் கனரக வாகனங்கள் செல்வதில் சிக்கல் நிலவுகிறது. ஒரு வாகனம் மற்றொரு வாகனத்திற்கு வழி விடும்போது சகதியில் சிக்கிக் கொள்கின்றன. சிக்கிய வாகனத்தை மீட்டெடுக்க மிகவும் சிரமம் ஏற்படுவதோடு பிற வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ