உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மண் திருட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மண் திருட்டு வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மேலுார் அருகே கீரனுார் கேசிராஜன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மாவட்ட எல்லையில் கீரனுார், சிவகங்கை மாவட்ட எல்லையில் ஏனாதி அருகருகே உள்ளன.ஏனாதியில் குறிப்பிட்ட சர்வே எண்களில் மண் அள்ள ஒருவருக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு மண் அள்ளியதோடு, அருகிலுள்ள கீரனுாரில் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது. கேள்வி எழுப்பும் மக்களை மிரட்டுகின்றனர். மண் அள்ளியதால் ஏற்பட்ட பள்ளத்தில் மனிதர்கள், கால்நடைகள் விழுந்து பலியாக வாய்ப்புள்ளது. மதுரை, சிவகங்கை கலெக்டர்களுக்கு புகார் அனுப்பினேன். கீரனுாரில் சட்டவிரோதமாக மண் அள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எம்.தண்டபாணி, ஆர்.சக்திவேல் அமர்வு: மனுவை இரு கலெக்டர்களும் 4 வாரங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை