குவாரி உரிம வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: சிவகங்கை மாவட்டம் புதுார் விஸ்வநாதன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:கல்லங்குடி புதுாரில் மண் அள்ள ஒருவருக்குரிய உரிமம் முடிந்து விட்டது.ஆனால் சட்டவிரோதமாக மண் அள்ளப்படுகிறது. விவசாயம் பாதிக்கிறது. மண் அள்ள தடை விதிக்க வேண்டும்.இங்கு குவாரி நடத்த உரிமம் வழங்கக்கூடாது என கலெக்டர், கனிம வளத்துறை உதவி இயக்குனருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எழிலரசு,'குவாரியால் வனவிலங்குகள், பறவைகள் பாதிக்கப்படுகிறது,'' என்றார்.நீதிபதிகள், 'மக்கள், பிற உயிரினங்களுக்கு பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின் உரிமம் வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும். அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்,' என உத்தரவிட்டனர்.