உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கையில் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை 

சிவகங்கையில் உயர்கல்வி கட்டுப்பாட்டு அறை 

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் உயர்கல்வி வழிகாட்டல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: பிளஸ் 2 முடித்த மாணவர்களின் உயர்கல்வி வழிகாட்டலுக்கு இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான வழிகாட்டுதல், பெற்றோருக்கு உயர்கல்வி தொடர்பான விளக்கம் அளிக்கப்படும். தற்போது பிளஸ் 2 க்கு பின் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக், ஐ.டி.ஐ., தொடர்பான படிப்புகளில் எங்கு சேர்வது, அதற்கான நுழைவு தேர்வு, உதவி தொகை எங்கு கிடைக்கும் என்பது போன்ற தகவல்களை பெறலாம்.இக்கட்டுப்பாட்டு அறை 2025 அக்டோபர் வரை தினமும் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை செயல்படும். கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் வந்து தகவல் பெறலாம். இல்லாத பட்சத்தில் 04575 -246 225 அல்லது 94871 71986 என்ற எண்ணில் கேட்டு அறியலாம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ