உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நெடுஞ்சாலை பணிக்காக கண்மாய்க்கரை உடைப்பு

நெடுஞ்சாலை பணிக்காக கண்மாய்க்கரை உடைப்பு

காரைக்குடி : காரைக்குடி அருகே பாதரக்குடியில் நெடுஞ்சாலை பணிக்காக கண்மாய்க்கரையை உடைத்ததால் தண்ணீர் வீணாகி விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். பாதரக்குடி ஊராட்சியில் 100 ஏக்கருக்கும்அதிகமாக விவசாயம் நடைபெறுகிறது. இங்குள்ள புதுக் கண்மாய் மூலம் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தொடர் மழை காரணமாக கண்மாயில் தண்ணீர் நிறைந்து இருந்தது. இந்நிலையில் மேலுார் மதுரை நெடுஞ்சாலை பணிக்காக முறையான அறிவிப்பின்றி கண்மாயை உடைத்ததால் தண்ணீர் வீணானதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விவசாய பணி முடியும் வரை தண்ணீரை வெளியேற்றி வீணடிக்காமல் இருப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி