பாதையை மூடிய நெடுஞ்சாலைத்துறை
திருப்புவனம்: போதிய திட்டமிடல் இன்றி பாலப்பணி நடந்ததால் விவசாயிகள் பயன்படுத்தி வந்த பாதை மூடப்பட்டதால் தவித்து வருகின்றனர். திருப்புவனம் பகுதியில் வைகை ஆற்றுப் பாசனத்தை நம்பியே விவசாயம் நடை பெறுகிறது. நெல், வாழை, கரும்பு, தென்னை என ஏராளமான விவசாயம் நடைபெறுகிறது. வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும், வலது மற்றும் இடது பிரதான கால்வாய்கள் மூலம் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும். கால்வாய்களில் குறிப்பிட்ட இடங்களில் அனைத்து கண்மாய்களுக்கும் தண்ணீரை பிரித்து அனுப்ப ஷட்டர் பொருத்தப்பட்டுள்ளது. ஷட்டர்களை அடைக்க வும், திறக்கவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் செல்வது உண்டு. இதற்காக கால்வாய் கரையில் வாக னங்கள் செல்லும் வகையில் பாதைகள் இருந்தன. லாடனேந்தலில் உள்ள மாரநாடு தடுப்பணையில் இருந்து மாரநாடு கண்மாய்க்கு செல்லும் ஒன்பது கி.மீ., துாரம் கால்வாய் உள்ளது. இதில் கால்வாய் கரையில் செல்ல பாதை வசதியும் அமைக்கப்பட்டது. லாடனேந்தல் - பெத்தானேந்தல் இடையே புதிய பாலம் கட்டுமான பணியின் போது பாதையை மூடி நெடுஞ்சாலைத்துறையினர் பாலம் அமைத்தனர். அப்போதே விவ சாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பாலம் ஆய்வு செய்ய வந்த சட்டமன்ற உறுதி மொழி குழுவிடமும் புகார் அளித்தனர். சட்டமன்ற உறுதிமொழி குழு நெடுஞ் சாலைத்துறை அதிகாரி களிடம் விவசாயிகளுக்கு பாதை அமைத்து தர உத்தரவிட்டனர். அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளா மல் பாலப்பணியை முடித்து விட்டனர். மாரநாடு கால்வாய்க்கு தேசியநெடுஞ்சாலை யில் இருந்து தடுப்பணை கரை வழியாக தார்ச் சாலையும் அமைக்கப் பட்டிருந்தது. பாலம் கட்டப் பட்டதால் அந்த பாதை சிதிலமடைந்து பயன் படுத்தவே முடியாத அளவிற்கு உள்ளது. மழை காலம் தொடங்கி உள்ள நிலையில் மாரநாடு கண்மாய்க்கும் தண்ணீர் திறக்கப்படும். பாதை அடைபட்டதால் தண்ணீர் முழுமையாக செல்கிறதா, அடைப்பு ஏற்பட்டுள்ளதா என கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.