காரைக்குடியில் ஹிந்து அமைப்பினர் போராட்டம்
காரைக்குடி: காரைக்குடியில் பா.ஜ., ஹிந்து அமைப்புகள் சார்பில் போராட்டம் நடந்த போது, மைக்கை போலீசார் பறிமுதல் செய்ததால், தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சாலை மறியல் போராட்டமும் நடந்தது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 5 விளக்கு பகுதியில், வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் மீது தொடரும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஒலிபெருக்கி மூலம் வங்கதேச சூழ்நிலை குறித்து பேசிக் கொண்டிருந்தபோது போலீசார் ஒலிபெருக்கி மூலம் பேசுவதற்கு அனுமதி இல்லை எனக் கூறி மைக்கை பிடுங்கி சென்றனர். இதனால் அங்கு இருந்த பா.ஜ., மற்றும் ஹிந்து முன்னணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்ட 20 பெண்கள் உள்பட 250 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.