உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு: 3 பேர் கைது

ஓட்டல் உரிமையாளருக்கு வெட்டு: 3 பேர் கைது

மானாமதுரை, : மானாமதுரை ஆதனுார் சாலை பகுதியை சேர்ந்த முகமது இக்ரம் முல்லா மகன் முகமது யாகூப் சேட் 33, இவர் வசந்த நகர் அருகே பெட்ரோல் பங்க் நடத்தி வரும் நிலையில் அதன் அருகிலேயே ஓட்டலும் நடத்தி வருகிறார். 29ம் தேதி முன்பகை காரணமாக அங்கு வந்த சிலர் இவரை அரிவாளால் வெட்டினர். காயமடைந்து அவர் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து மானாமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து கமுதி அருகே உள்ள செய்யாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷ் குமார் 20,மானாமதுரை மறவர் தெருவைச் சேர்ந்த ஹரிஹரன் 19, மானாமதுரை அருகே உள்ள தீயனுார் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் 20 3 பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ