மேலும் செய்திகள்
தற்காலிக பணியாளர்களுக்கு ஓய்வூதிய திட்டம்
25-Jan-2025
காரைக்குடி: குடியரசு தின விழாவில், விடுதி காப்பாளருக்கு மட்டும் நற்சான்றிதழ் வழங்கப்பட்டு பிற பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.குடியரசு தின விழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய பல்வேறு அரசு அலுவலர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. மேலும் பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விடுதி பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் மாநில அளவில் 3 சிறந்த விடுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு மற்றும் கேடயம் வழங்கப்படும். விடுதி காப்பாளர், காவலர், சமையலர், துாய்மை பணியாளர்களுக்கும் நற்சான்றிதழ், பரிசுத் தொகை வழங்கப்பட்டது. நற்சான்றிதழுடன் காப்பாளருக்கு முதல் பரிசாக ரூ. 20 ஆயிரமும், விடுதி காவலருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், சமையலருக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் துாய்மை பணியாளருக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. சமீப காலமாக இந்த நற்சான்றிதழும், பரிசுத்தொகையும் காப்பாளருக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. பிற பணியாளர்களுக்கு வழங்கப்படுவதில்லை. தங்களுக்கும், இதுபோன்று, சிறந்த பணியாளர்களை கண்டறிந்து முக்கிய அரசு விழாக்களில் நற்சான்றிதழ், பரிசுத்தொகை வழங்க வேண்டுமென விடுதி பிற பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
25-Jan-2025