உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வீட்டை உடைத்து நகை திருட்டு

வீட்டை உடைத்து நகை திருட்டு

காரைக்குடி; குன்றக்குடி அருகேயுள்ள காமதேனு நகரை சேர்ந்தவர் ரவி 59. இவரது மனைவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை செய்து வருகிறார். இருவரும் வீட்டை பூட்டிவிட்டு, வேலை காரணமாக வெளியே சென்றுள்ளனர். மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது பூட்டியிருந்த வீட்டை உடைத்து பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் பணம் திருடு போயிருந்தது. ரவி கொடுத்த புகாரின் பேரில், குன்றக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ