உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / அரசு பள்ளியில் வாசிப்பு பயிற்சிக்கு முக்கியத்துவம்

அரசு பள்ளியில் வாசிப்பு பயிற்சிக்கு முக்கியத்துவம்

திருப்புத்தூர்: அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில் வாசிப்பு, அடிப்படை கணிதத்திற்கு முக்கியத்துவம் அளித்து பயிற்சி அளிக்கின்றனர். இந்த கல்வியாண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கல்வித்துறை அலுவலர்கள் ஆசிரியர்களிடம் முதல் மாதத்தில் மாணவர்களின் வாசிப்புத் திறனை அதிகரிக்கவம், அடிப்படை கணிதம், வாய்ப்பாடு பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் தற்போது தமிழ், ஆங்கிலம் வாசிப்பு பயிற்சியை மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அளிக்கின்றனர். வாசிப்பிற்கும், கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படை கணிதம் மற்றும் வாய்ப்பாடுக்கும் 75 சதவீத நேரம் ஒதுக்கி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். ஒரு மாதப் ப்யிற்சிக்கு பின் மாணவர்களின் வாசிப்புத் திறன் குறித்து அலுவலர்கள் ஆய்வு செய்ய உள்ளதாக மாவட்டக்கல்வி அலுவலர் செந்தில்குமார் அறிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ