உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் பள்ளி, விடுதியில் புதர்கள் மண்டிகிடப்பதால் அவதி

காரைக்குடியில் பள்ளி, விடுதியில் புதர்கள் மண்டிகிடப்பதால் அவதி

காரைக்குடி ; காரைக்குடி தாசில்தார் அலுவலகம் பின்புறம் செயல்படும் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் மாணவர் விடுதிகளை சுற்றிலும் பழைய வாகனங்கள், புதர்ச் செடிகள் சூழ்ந்தும், மழைநீர் தேங்கியும் கிடப்பதால் மாணவர்களுக்கு நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. காரைக்குடி தாசில்தார் அலுவலகம் பின்புறம் ராமநாதன் செட்டியார் நகராட்சி தொடக்கப்பள்ளி, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் விடுதிகள் செயல்பட்டு வருகிறது. அருகிலேயே தெற்கு போலீஸ் ஸ்டேஷன் செயல் பட்டு வருகிறது.இவ்வாறாக தெற்கு போலீஸ் ஸ்டேஷன், பள்ளி மற்றும் விடுதிகளுக்கு செல்வதற்கு சாலை வசதி இல்லை. பள்ளி மற்றும் விடுதிகள் முன்பு புதர்ச் செடிகள் மண்டி கிடக்கிறது.தவிர, வழக்குகளில் சிக்கிய 100க்கு மேற்பட்ட வாகனங்கள் பழைய இரும்பு கடை போல் குவிந்து கிடைக்கிறது. வாகனங்கள் முழுவதும் செடிகள் மூடி பயன்பாடின்றி வீணாகி வருகிறது. பள்ளி மற்றும் விடுதிகளின் வாயில்களில், பல மாதங்களாக லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதிலும் செடிகள் வளர்ந்துள்ளது.இந்நிலையில் தற்போது பெய்த தொடர் மழை காரணமாக அப்பகுதியில் நடந்து கூட செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால், கொசுக்கள் உற்பத்தியாகி மாணவர்களுக்கு நோய் பரவும் அச்சம் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ