மேலும் செய்திகள்
கவர்னருக்கு நினைவு பரிசு
07-Apr-2025
காரைக்குடி: காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் 87வதுகம்பன் திருநாள் தொடங்கியது.நிகழ்ச்சிக்கு கம்பன் அறநிலை புரவலர் ஏ.சி. முத்தையா முன்னிலை வகித்தார். கம்பன் அறநிலை தலைவர் எஸ். பெரியணன் வரவேற்றார். கோவிலுார் நாராயண ஞான தேசிக சுவாமி ஆசி வழங்கினார். நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் தலைமையேற்றார். உயர் நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் பேசினார்.கம்பனின் போரும் அமைதியும் என்ற தலைப்பில் பாரதி பாஸ்கர் பேசினார். நிகழ்ச்சியில், பா.ஜ., முன்னாள் தேசியச் செயலாளர் எச். ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் இன்று மாலை வரை விழா நடைபெறுகிறது. ஏப். 11ல் நாட்டரசன்கோட்டை கம்பன் கோயிலில் பங்குனி திருநாள் நடைபெறுகிறது.
07-Apr-2025