உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பிள்ளைவயல் கோயிலில் டிச.10ல் கும்பாபிேஷகம் டிச.8ல் யாகசாலை துவக்கம் 

பிள்ளைவயல் கோயிலில் டிச.10ல் கும்பாபிேஷகம் டிச.8ல் யாகசாலை துவக்கம் 

சிவகங்கை: சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் கோயில் கும்பாபிேஷகம் டிச., 10 அன்று காலை 9:00 மணி முதல் 10:25 மணிக்குள் நடைபெற உள்ளது.ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் உள்ள இக்கோயிலில் அம்மன் சன்னதி மூலஸ்தான கோபுரம், பரிவார தெய்வங்களின் கோபுரங்கள், பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள பிள்ளைவயல் ஆர்ச் உள்ளிட்டவை புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. டிச., 8 ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு மங்கள இசை, அனுக்கை, விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிேஷக பூஜை தொடங்குகிறது.அன்று மாலை 4:00 மணிக்கு முதல் கால யாகசாலை பூஜையும், இரவு கலைநிகழ்ச்சி, பரதநாட்டியம் நடைபெறும். தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜை, யாகவேள்விகள் நடைபெறும். டிச., 10 அன்று அதிகாலை 5:30 மணிக்கு 4ம் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிேஷக பூஜைகள் துவங்குகிறது.அன்று காலை 9:05 மணி முதல் 10:25 மணிக்குள் கடம் புறப்பாடும் அதனை தொடர்ந்து கோபுர கலசத்தில் சிவாச்சாரியார் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள் தலைமையில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தி வைக்கின்றனர்.யாகசாலை பூஜையின் போது திருமுறை பாராயணமும் நடைபெறும். ஹிந்து அறநிலைய செயல் அலுவலர் நாராயணி தலைமையில், கும்பாபிேஷக விழாக்குழுவினர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை