உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை மாவட்டத்தில் கனிம வள கடத்தல் அதிகரிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் கனிம வள கடத்தல் அதிகரிப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் இரவு நேரங்களில் கிராவல் மண் அதிகஅளவில் கடத்தப்படுகிறது. விதிகளை மீறி அனுமதி பெறாத இடங்களிலும் மணல் அள்ளப்படுகிறது.இம்மாவட்டத்தில் சில நாட்களாக வைகை ஆற்று பகுதிகளில் இயந்திரங்கள் மூலம் டிப்பர் லாரிகளில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது. மேலும் கல்லல், தேவகோட்டை பகுதிகளில் இரவு நேரங்களில் ஆற்று மணல் கடத்தப்படுகிறது. சாலைக் கிராமம் வருவாய் குரூப்பிலுள்ள தெற்கு சமுத்திரத்தில் ஒத்த அரசன் முனீஸ்வரர் கோயில் பகுதியில் இரவு நேரங்களில் விதிகளை மீறி மண் அள்ளப்பட்டு வருகிறது.இம்மாவட்டத்தில் சில இடங்களில் அரசு அனுமதி பெற்று கிராவல் குவாரி நடத்தப்படுகிறது. ஆனால் பல இடங்களில் சிலர் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாத இடங்களிலும் மண் அள்ளுகின்றனர்.அனுமதி பெற்ற குவாரிகளிலும் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மண் அள்ளுகின்றனர்.சில நாட்களுக்கு முன் சிவகங்கை நகராட்சி பொது மயானத்துக்கு பின்புறம் கிராவல் மண் அள்ளிக் கடத்தியதாக கூறி பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கடந்த மாதம் சிவகங்கைஅருகே வல்லனேரியில் ரோட்டோரத்தில் கிராவல் மண் அள்ளிய வாகனங்களை கிராம மக்கள் சிறை பிடித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.போலீசார் இரவில் ரோந்து பணிகளில் ஈடுபட்டும், சோதனைச் சாவடிகள் அமைத்து சோதனையில் ஈடுபட்டாலும் மாவட்டத்தில் மணல், கிராவல் மண் கடத்தல் லாரிகள் தாராளமாக வலம் வருகின்றன. இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைவதுடன் சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை