உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 10 அடிக்கு மேல் சிலை வைக்க தடை; விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் தகவல்  

10 அடிக்கு மேல் சிலை வைக்க தடை; விநாயகர் சதுர்த்தி ஆலோசனை கூட்டத்தில் தகவல்  

சிவகங்கை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 அடி உயரத்திற்கு மேல் சிலைகள் வைக்கக்கூடாது என சிவகங்கையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முக்கிய இடங்களில் சிலைகள் வைத்து வழிபடுதல், சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை நீர்நிலைகளில் கரைத்தல் குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் பொற்கொடி தலைமையில் நடந்தது. சிவகங்கை எஸ்.பி., சிவபிரசாத், தேவகோட்டை சப்- கலெக்டர் ஆயுஷ் வெங்கட் வத்ஸ், காரைக்குடி உதவி எஸ்.பி., முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் விஜயகுமார், தாசில்தார்கள், டி.எஸ்.பி.,க்கள், பா.ஜ., ஹிந்து முன்னணியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். கூட்டத்தில் கடந்த ஆண்டு வைக்கப்பட்ட இடங்களில் மட்டுமே விநாயகர் சிலைகளை நிறுவ வேண்டும். புதிதாக சிலை வைக்க அனுமதியில்லை. அதே போன்று களிமண் மற்றும் நீர்நிலைகளை பாதிக்காத வகையில் தயாரித்த சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு இடத்திலும் 10 அடி உயரத்திற்கு மேல் சிலை வைக்க அனுமதியில்லை. பிளாஸ்டர் ஆப் பாரீசில் செய்த சிலைகளை பயன்படுத்த தடை. மேலும், ஏற்கனவே சிலை தயாரித்தவர்களிடமிருந்து மட்டுமே சிலைகளை வாங்க வேண்டும். புதிதாக யாரும் சிலை தயாரிக்க அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி