உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனம் கிராமங்களில் சோலார் மின்விளக்கு பொருத்துவது அவசியம்

திருப்புவனம் கிராமங்களில் சோலார் மின்விளக்கு பொருத்துவது அவசியம்

திருப்புவனம்; திருப்புவனத்தைச் சுற்றிலும் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 174 கிராமங்கள் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில் மின்சாரம் முறையாக விநியோகிப்பது கிடையது. இதனால் தெருக்கள், முக்கிய சாலைகளில் தெருவிளக்குகள் இன்றி இருட்டில் மூழ்கி கிடக்கின்றன. வெளியூர்களில் கூலி வேலை செய்து விட்டு ஊர் திரும்பும் மக்கள் இருட்டில் செல்ல அச்சப்படுகின்றனர். நகர்ப் புறங்களில் சோலார் மின் விளக்குகள் ஏராளமாக பொருத்தப்பட்டுள்ளன. பகல் முழுவதும் சூரிய ஒளியில் சார்ஜ் செய்து கொண்டு இரவில் தானாகவே ஒளிரும் தன்மை கொண்டவைகள். 2019ல் திருப்புவனம் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகபட்சமாக 13 இடங்களில் மட்டுமே சோலார் மின்விளக்குகள் பொருத்தப்பட்டன. அதற்கு பின் விளக்கு வசதி செய்யவில்லை. ஆனால் தற்போது திருப்புவனம் நகரில் மட்டும் 190 சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மின்சார பயன்பாட்டை மிச்சப்படுத்தும் வண்ணமாக எல்.இ.டி., விளக்குகள் அதிகம் பயன்படுகிறது. 2019ல் 3,906 விளக்குகள் இருந்த நிலையில் தற்போது 5,548 விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மின்சார கட்டணம் சற்று குறைந்துள்ளது. நான்கு வழிச்சாலையில் கிராமங்களுக்கு செல்லும் இடங்களில் உயர் மின்கோபுர விளக்குகள் பொருத்தப்பட்டு அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் பராமரிப்பில் விடப்பட்டுள்ளன. இதனால் ஓரளவிற்கு நான்கு வழிச்சாலையில் இருந்து கிராமங்களுக்கு திரும்பும் சாலைகளில் விபத்துகளும் குறைந்துள்ளன. கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மின்சார கட்டணத்தை குறைக்கும் வண்ணம் சோலார் மின் விளக்குகள் அதிகளவில் பொருத்தப்பட வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் அதிகளவில் எம்.பி., எல்.எல்.ஏ.,க்கள் நிதியில் சோலார் மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. கடந்த 4 ஆண்டுகளில் சோலார் மின்விளக்குகள் ஒருசில இடங்களில் மட்டுமே பொருத்தியுள்ளனர். எனவே அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமயானம், சமுதாய கூடம், சுகாதார வளாகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சோலார் மின்விளக்கு பொருத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை