உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜாக்டோ ஜியோ கூட்டம்

ஜாக்டோ ஜியோ கூட்டம்

சிங்கம்புணரி: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சிங்கம்புணரி வட்டாரக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் தலைமையில் நடந்தது. குமரேசன், ரமேஷ் முன்னிலை வகித்தனர். கூட்டமைப்பு நிர்வாகிகள் அர்ச்சுனன், மதிவாணன், மயிலேசன், ராம் பிரசாத், சேக் அப்துல்லா பேசினர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தேர்தல் அறிக்கையில் கூறியபடி புதிய பென்ஷன்திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முதல் கட்டமாக பிப்.14ல் சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். அடுத்த கட்டமாக பிப்.25ல் சிவகங்கையில்மறியல் போராட்டம் நடத்தப்படும். கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு காலதாமதம் செய்தால் மாநில ஜாக்டோ ஜியோ கூடி அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை