உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஜாக்டோ ஜியோ கூட்டம்

ஜாக்டோ ஜியோ கூட்டம்

சிங்கம்புணரி: அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வட்டார கூட்டம் சிங்கம்புணரி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் தலைமையில் நடந்தது. வட்டார ஒருங்கிணைப்பாளர் ஷேக் அப்துல்லா முன்னிலை வகித்தார். மாவட்ட ஜாக்டோ ஜியோவின் சார்பில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு உறுப்பினர் முத்துப்பாண்டியன் பேசினார். கூட்டத்தில், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், பள்ளிக்கல்வித்துறை அரசாணை எண்.243 ஐ ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப். 8 அன்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை