உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புத்துாரில் ஜம்புத்தீவு பிரகடன நாள்

திருப்புத்துாரில் ஜம்புத்தீவு பிரகடன நாள்

திருப்புத்துார்; திருப்புத்துார் மருதுபாண்டியர் துாக்கிலிடப்பட்ட நினைவுத்துாண் வளாகத்தில் மருதுபாண்டியர் 'ஜம்புத்தீவு பிரகடனம்' நாள் விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் பிரசுரங்களை வழங்கினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நாட்டிலிருந்து வெளியேறக் கூறி 224 ஆண்டுகளுக்கு முன்பு ஜூன் 16ல் சிவகங்கை மருதுபாண்டியர்கள் போர்ப் பிரகடனத்தை ஸ்ரீரங்கம், திருச்சிக் கோட்டைக் கதவுகளில் வெளியிட்டனர். இது வரலாற்று ஆய்வாளர்களால் 'ஜம்புத்தீவு பிரகடனம்' என்றழைக்கப்படுகிறது.நேற்று மருதுபாண்டியர் நினைவுத்துாணில் இந்த தினம் அனுசரிக்கப்பட்டது. மருதுபாண்டியர் வாரிசுதார் ராமசாமி,முன்னாள் அமைச்சர் தென்னவன் முன்னிலை வகித்தனர். மருதிருவர் இளைஞர்நல அறக்கட்டளை நிறுவனர் பாண்டியன் வரவேற்றார். அமைச்சர் பெரியகருப்பன் மருதுபாண்டியர் சிலை, நினைவுத்துாணிற்கு பட்டு அணிவித்து, மலரஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து பிரகடனம் குறித்த பிரசுரங்களை வெளியிட்டார். பின்னர் பார்வை இழந்தோர் பள்ளி மாணவர்கள், உடல் ஊனமுற்றோர் பள்ளி மாணவர்கள், பெற்றோர்களை இழந்த மாணவ மாணவிகள் ஆகியோருக்கு சீருடை மற்றும் உதவித்தொகை வழங்கினார். செயலாளர் நந்தீஸ்வரன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை