உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தங்கம் வழிப்பறி நகைக்கடை ஊழியர் கைது

தங்கம் வழிப்பறி நகைக்கடை ஊழியர் கைது

காரைக்குடி:மதுரை மாவட்டம், பழங்காநத்தத்தை சேர்ந்தவர் விஜயராஜா, 42. இவர், தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள நகைக்கடையில் வேலை செய்தார். ஆக., 4 இரவு காரைக்குடியில் ஒன்றரை கிலோ தங்க கட்டிகளுடன் நடந்து சென்றார். இவரை பின் தொடர்ந்த சிலர் தங்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் என்று கூறி, காரில் கடத்தி தங்க கட்டிகளை பறித்தனர். தனிப்படை போலீசார் விசாரணையில், விஜயராஜாவுடன் அதே கடையில் வேலை செய்த மஹாராஷ்டிராவை சேர்ந்த மனோஜ், 38, வழிப்பறி செய்தது தெரியவந்தது. விஜயராஜா காரைக்குடி செல்வதை அறிந்து, திட்டம் தீட்டி வட மாநிலத்தில் இருந்து தன் நண்பர்களை வரவழைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். மனோஜை கைது செய்த போலீசார், தங்க கட்டிகளை எடுத்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !