உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ரயிலில் தவறவிட்ட பை உரியவரிடம் சேர்ப்பு

ரயிலில் தவறவிட்ட பை உரியவரிடம் சேர்ப்பு

மானாமதுரை: காரைக்குடி அருகே உள்ள சுப்பிரமணியபுரம் 7வது தெருவைச் சேர்ந்த ஆதிநாராயணன் மகன் யோகேஷ் 18, இவர் சென்னையில் இருந்து மண்டபம் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது தான் கொண்டு வந்த ஒரு பையில் அலைபேசி மற்றும் முக்கிய ஆவணங்களை வைத்திருந்தார். காரைக்குடியில் இறங்கும்போது பையை மறந்து விட்டு சென்றார்.இதுகுறித்து அவர் ரயில்வே போலீசாருக்குதகவல் தெரிவித்ததை தொடர்ந்து மானாமதுரையில் இருந்த ரயில்வே போலீஸ் முருகன், அவர் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்து யோகேஷ் கொண்டு வந்த பையை கண்டுபிடித்து அவரது தந்தை ஆதிநாராயணனை மானாமதுரை ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு வரவழைத்து ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !