உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கழனிவாசல் மூன்று சாலை சந்திப்பு தினமும் நடக்கும் விபத்துக்கள்

கழனிவாசல் மூன்று சாலை சந்திப்பு தினமும் நடக்கும் விபத்துக்கள்

காரைக்குட : காரைக்குடி கழனி வாசல் மூன்று சாலை சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.காரைக்குடி நகரின் முக்கிய மூன்று சாலை சந்திப்பாக கழனிவாசல் சாலை உள்ளது. திருச்சி நெடுஞ்சாலை, தேவகோட்டை சாலை, வாட்டர் டேங்க் ஆகிய சாலைகளை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இப்பகுதி காரைக்குடி வியாழன் சந்தை, பழைய பஸ் ஸ்டாண்ட், அரசு மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் முக்கிய சாலையாக உள்ளது.காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமான பள்ளி கல்லூரி செல்பவர்கள் வெளியூர் பஸ்கள் பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, விபத்தும் நடந்து வருகிறது. இந்த பகுதியில் போக்குவரத்தை ஒழுங்கு படுத்த சிக்னலும் இல்லை. போக்குவரத்து போலீசாரும் இல்லை.சாலையின் நடுவே ரவுண்டானா அமைப்பதற்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை