உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி அழகப்பா பல்கலை., துணைவேந்தர் பதவி காலம் நிறைவு

காரைக்குடி அழகப்பா பல்கலை., துணைவேந்தர் பதவி காலம் நிறைவு

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் க.ரவி பதவிக்காலம் இன்று நிறைவடைகிறது. காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தராக இருந்த ராஜேந்திரன் பதவி காலம் கடந்த 2021ம் ஆண்டு முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து,புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய உயர் கல்வித் துறை செயலர் தலைமையில் பொறுப்புக் குழு அமைக்கப்பட்டு சட்டப்பல்கலை முன்னாள் துணைவேந்தர் சத்ய நாராயணா தலைமையில் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. இக்குழு தேர்வு செய்தவர்கள் நிராகரிக்கப்பட்டதோடு தேடுதல் குழுவும் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஆர்.என்.ரவி தமிழக கவர்னராக பொறுப்பேற்றார். இவர் புதிய துணைவேந்தரை நியமிக்க யு.ஜி.சி., தலைவர் ஜெகதீஷ் தலைமையில் புதிய தேடுதல் குழுவை அமைத்தார். அக்குழுவின் பரிந்துரையின் பேரில், அழகப்பா பல்கலை., துணைவேந்தராக 2022ம் ஆண்டு ஆகஸ்டில் க. ரவி தேர்வு செய்யப்பட்டார். அழகப்பா பல்கலையில் இயற்பியல் துறை தலைவர் பொறுப்பு உட்பட 35 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் கொண்ட துணைவேந்தர் க.ரவி பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. புதிய துணைவேந்தர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ